மேலதிக வகுப்புகளை எதிர்வரும் 25ம் திகதி முதல் மீண்டும் நடத்துவதற்கு அனுமதி - கல்வி அமைச்சர்


கொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட மேலதிக வகுப்புகளை எதிர்வரும் 25ம் திகதி முதல் மீண்டும் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர்  ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த கேள்விக்குப் பதிலளிக் கையிலேயே கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மாத்திரமின்றி அனைத்து உலக நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது.

இதனால் அனைத்து நாடுகளும் மாணவர்களின் நலன் கருதி கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

எனினும் கட்டம் கட்டமாகப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் வகையில் எதிர்வரும் 25ம் திகதி முதல் மேலதிக வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்படும் என கல்வி அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: