கிழக்கில் கடந்த 24 மணித்தியாலத்தில் 60 பேர் தொற்றாளர்களாக அடையாளம்
கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 60 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ.லதாகரன் குறிப்பிட்டார்.
இதுவரை முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன்ட் பரிசோதனைகளின் படி 1497 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் திருகோணமலை மாவட்டத்தில் 193 பேரும்.மட்டக்களப்பு மாவட்டத்தில் 334 பேரும்,அம்பாறை பிராந்தியத்தில் 53 பேரும்,கல்முனை பிராந்தியத்தில் 917 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை 915 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் 599 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் இதுவரை 09 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.
No comments: