கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 24 பேர் கைது


முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 24 பேர் கைது செய்யப்பட்டுள் ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் 30ம் திகதியிலிருந்து இதுவரை முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இதுவரை 2,770 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அத்துடன் 2600 நபர் கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


No comments: