சீமெந்து லொறியின் சக்கரத்தில் சிக்கி நபர் ஒருவர் பலி - திருகோணமலையில் சம்பவம்

சந்திரன் குமணன்


திருகோணமலை  மட்டக்களப்பு பிரதான வீதி சந்தியில் சீமெந்து லொறியில் மோதுண்டு 65 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர்  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து நேற்று (25) மாலை இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை பச்சிலை  சந்திக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த நபரே ஸ்தலத்தில் மரணமடைந்துள்ளார்.

மூதுரை சேர்ந்த 65 வயதுடைய சித்திக் என்ற நபரை முந்திசெல்ல முயன்ற சீமெந்து லொறியின் பின் சக்கரத்தில் சிக்குண்டு பலியாகியாகியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர் .

சம்பவம் இடம்பெற்ற பச்சிலை சந்திக்கு விரைந்த மூதூர் பொலிஸார் லொறியின் சாரதியை கைது செய்ததுள்ளதாகவும் விபத்து தொடர்பில்  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.

No comments: