நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் வீதி விபத்துக்களில் 30 பேர் உயிரிழப்பு


நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் வீதி விபத்துக்களில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜனவரி 17 ஆம் திகதி முதல் 22 திகதி வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் பதிவான 427 வீதி விபத்துக்களில் மொத்தமாக 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதில் 90 பேருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன் 189 பேருக்குச் சாதாரண காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வாரத்தில் மாத்திரம் கிட்டத்தட்ட 500 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக அஜித் ரோஹாண தெரிவித்துள்ளார்.

வாகனம் செலுத்தும் போது வீதி சட்டத்திற்கு அமைய செய்யற்படுமாறு கேட்டுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: