தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய மேலும் 20 பேர் கைது


மேல் மாகாணம் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியினை தவிர்த்து செயற்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த ஒக்டோபர் மாதம் 30ம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 2,381 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளில் 24 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை தனிமைப்படுத்தப்பட்ட சட்டவிதிமுறைகளை மீறியதற்காக மேல் மாகாணத்தில் மாத்திரம் 166 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.




No comments: