அரசியலமைப்பில் உள்வாங்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் யோசனை முன்வைப்பு


மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் அரசியலமைப்பில் உள்வாங்கப்பட வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு யோசனை முன்வைத்துள்ளது.

நாட்டின் தற்போதைய அரசியலமைப்பில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் ஆகியன மாத்திரமே உள்வாங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேர்தல் முடிவுகள் வெளியானதன் பின்னர் 30 நாட்களுக்குள் அதன் செலவீனங்கள் மற்றும் வருமான ஆவணங்கள் தொடர்பான விபரங்களை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்க வேண்டும் என ஆணைக்குழுவில்  யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்புரிமை நாடாளுமன்ற உறுப்பினர்களினால் ஏற்படுத்தப்படும் தவறுகள், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவு மற்றும் பெண் பிரதிநிதித்துவம் ஆகியவை தொடர்பான யோசனை திட்டங்களை முன்வைப்பதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments: