1,128 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளுடன் இருவர் கைது
கொழும்பு முகத்துவாரம் பகுதியில்,நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 1128 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளுடன் இருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
முகத்துவாரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,குறித்த மஞ்சள் தொகையை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய லொறியையும் பறிமுதல் செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் முகத்துவாரம் மற்றும் கிரான்பாஸ் பகுதிகளைச் சேர்ந்த 45,50 வயதுடையவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முகாத்துவாரம் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: