ஹட்டன் லெதண்டி பெல்மோரா தோட்டப் பகுதியில் சிறுத்தையொன்று சடலமாக மீட்பு

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்


ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் லெதண்டி பெல்மோரா தோட்ட தேயிலை 
மலையில் இருந்து இன்றைய தினம் (06.01.2021) சிறுத்தையொன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நல்லதன்னி வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இறந்த நிலையில் கிடந்த சிறுத்தை புலியினை இனங்கண்ட பொது மக்கள் ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து ஹட்டன் பொலிஸார் ஊடாக நல்லதன்னி வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து,சிறுத்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுத்தையின் கழுத்து மற்றும் கால் பகுதியில் காயங்கள் காணப்பட்டதாக வனவிலங்கு அதிகாரிகளின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும்,சிறுத்தை எவ்வாறு இறந்தது என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை  நல்லதன்னி வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.



No comments: