நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு - 1060 பேர் கைது
மேல் மாகாணம் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில், தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட 81 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியினை தவிர்த்து செயற்பட்டவர்களெ இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த ஒக்டோபர் மாதம் 30ம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 2,253 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பாதுகாப்பு முகக் கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியினை கடைபிடித்தல் போன்ற விதிமுறைகளை மீறி செயற்படுபவர்கள் தொடர்பில், தொடர்ந்தும் கவனஞ் செலுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை,முகக் கவசம் அணியாத 1060 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் முகக் கவசம் அணியாத நபர்களை அடையாளம் காண மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது 1060 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 550 பேருக்கு மேற்கொண்ட என்டிஜன்ட் பரிசோதனைகளில் 14 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் மேலும் 510 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது அதன் அறிக்கைகள் கிடைக்கப்பெறவுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
No comments: