இன்று நாடு திரும்பிய இலங்கையர்கள்


கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருந்த  இருந்த 248 இலங்கையர்கள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.

கடந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள் 18 விசேட விமானங்கள் ஊடாக அவர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி,  அரபு ராஜ்ஜியத்திலிருந்து 114 பேரும், கட்டார் நாட்டின் தோஹா நகரிலிருந்து 57 பேரும் இன்று நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த குழுவினர் இன்று காலை 8.30 அளவில் கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இந்த நிலையில், அவர்கள் விமான நிலையத்திலேயே பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: