மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறிய நபர்களில் ஒருவருக்கு மாத்திரம் கொரோனா தொற்று - Rapid Antigen பரிசோதனை
மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறிய நபர்களில் நேற்றையதினம் ஒருவருக்கு மாத்திரம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
750 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர் அடையாளங் காணப்பட்டுள்ளதாக, இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் இருந்து வெளி மாகாணங்களுக்கு செல்லும் நபர்களுக்கு Rapid Antigen பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை நேற்று முன்தினம் முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், நேற்று முன்தினம் ஐவருக்கும், நேற்றையதினம் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேல்மாகாணத்தின் மூன்று எல்லை பிரதேசங்களில், மறு அறிவித்தல் வரை, கொரோனா rapid Antigen நடமாடும் பரிசோதனை நடாத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கொழும்பு – கண்டி பிரதான வீதியின் நிட்டம்புவ பகுதி, அவிசாவளை – கொழும்பு பிரதான வீதியின் சாலாவ – கொஸ்கம பகுதி, கொழும்பு – சிலாபம் பிரதான வீதியின் கட்டுநாயக்க பகுதி மற்றும் தெற்கு அதிவேக பாதை ஆகிய பகுதிகளில் குறித்த பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய, பொலிஸாரின் ஒத்துழைப்புடன் குறித்த பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments: