அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை


இலங்கையில் ஜனவரி மாதத்தில் கொரோனா வைரசினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மருத்துவர் ஹரித அலுத்கே இதனை தெரிவித்துள்ளார்.

ஜனவரியில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனவரியில் நோயாளர்கள் எண்ணிக்கையும் உயிரிழப்பும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாக வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக முதியோர் இல்லங்களை உரியமுறையில் நிர்வகிக்கவேண்டும் என தெரிவித்துள்ள அவர் முதியோர் இல்லங்களில் வைரஸ் பரவுவதை தடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


 

No comments: