கொழும்பிலிருந்து ஹட்டனுக்கு வந்த இளைஞர் ஒருவருக்குக் கொரோனா தொற்று

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்


ஹட்டனில் உள்ளப் பாடசாலை ஒன்றுக்கு  நேர்முகப் பரீட்சைக்காக, கொழும்பிலிருந்து  வந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு - நவகம்புரவைச் சேர்ந்த 19 வயதுடைய குறித்த  இளைஞர், கடந்த 16ஆம் திகதி (16.12.2020) இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸில் கொழும்பிலிருந்து ஹட்டனுக்கு வந்துள்ளார்.

அன்றைய தினம் (16) கினிகத்தேன கலுகொல்ல பொலிஸ்  சோதனைச் சாவடியில் வைத்து  குறித்த இளைஞனுக்கு அம்பகமுவ பொது சுகாதாரப் பரிசோதகர்களால் பி.சி.ஆர்
பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

அதன் முடிவுகள் இன்று (20.12.2020) வெளியாகியது.அதில் குறித்த இளைஞனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த பஸ்ஸின் நடத்துனர் மற்றும் சாரதி ஆகியோர்  தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த இளைஞர் ஹட்டன் மெண்டிஸ் மாவத்தையில் உள்ள அறையில் (போர்டிங்) தங்கியிருந்ததனால், அந்த அறையிலிருந்த ஐவர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.அத்தோடு அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் குறித்த இளைஞரை கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்திற்கு அனுப்பி
வைக்க ஹட்டன் டிக்கோயா பொது சுகாதாரப் பரிசோதகர்கள் நடவடிக்கை
எடுத்துள்ளனர்.





No comments: