நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கு அதிக மழைவீழ்ச்சி பதிவாகும்


நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கு அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மத்திய மாகாணத்திலும், அம்பாறை, பதுளை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் இவ்வாறு 100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பகுதிகள் அதிக அபாயமுள்ள பிரதேசங்களாகவும் பெயரிடப்பட்டுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது

அத்துடன்,  இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், காற்றின் வேகமானது அதிகரித்து காணப்படும் எனவும், இதனால் ஏற்படும் அனர்த்தங்களில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு, அவதானமாக செயற்படுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

No comments: