அதிகரித்த மழை ; ஆலையடிவேம்பு பிரதேச சின்னமுகத்துவாரம் வெட்டப்பட்டது.
இரண்டு நாட்களாக ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பெய்து வரும் அதிகரித்த மழையினால் தாழ் நிலப்பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளமையால் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரின் அனுமதியுடன் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் பிரதேச சின்ன முகத்துவாரம் இன்று வெட்டப்பட்டது.
இதன்போது ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன்,பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன் ஆகியோர் சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக சீரற்ற காலநிலை நிலவுவதை அவதானிக்க முடிகின்றது.
நேற்று பகல் வேளை முதல் சீரற்ற காலநிலை நிலவி வருவதுடன் இன்று காலை முதல் இருள் நிறைந்த சூழலில் நிலவுவதுடன் அதி கூடிய மழை வீழ்ச்சியை காணக்கூடியதாக உள்ளது.
இதனால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள தாழ் நிலப்பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது
அம்மாவட்டத்தில் உள்ள பிரதேச சபைகள் அனர்த்த நிலமை தொடர்பாக கவனமெடுத்துள்ளதை அறியமுகின்றது.அனர்த்த நிலமை தொடர்பாக உடனடியாக செயற்படவும், இது தொடர்பில் மக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளதாக காரைதீவு, திருக்கோவில், ஆலையடிவேம்பு , பொத்துவில் பிரதேச சபை தவிசாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் இன்று காலை வேளை முதல் அதிகரித்த மழை வீழ்ச்சியால் மக்களின் அன்றாட செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: