மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நான்கு மாவட்டங்கள்
நாட்டின் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களுத்துறை, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்ஹள பிரதேச செயலக பிரிவுக்கும், கேகாலை மாவட்டத்தின் ஹெியோவிட்ட பிரதேச செயலக பிரிவுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, மாத்தறை மாவட்டத்தின் கொட்டபொல பிரதேச செயலக பிரிவுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம மற்றும் கஹவத்த பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் சந்தர்ப்பங்களில், மண்சரிவு, மண்மேடு சரிந்து விழுதல் மற்றும் வெள்ள அனர்த்தங்கள் குறித்து அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
No comments: