சிறைச்சாலைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு


எதிர்வரும் நத்தார் பண்டிகை தினத்தன்று சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு வெளிநபர்களுக்கு அனுமதிவழங்கப்படமாட்டாது என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல்   காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் சிறைச்சாலைகளில் இதுவரை  3279  பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களுள் கைதிகள் 2584 பேர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் 114 பேர் உள்ளடங்குவதாக சிறைச்சாலைகள் திணைக்களம்  மேலும் தெரிவித்துள்ளது.

No comments: