தலவாக்கலை நகரில் கொள்ளை சம்பவம் - சந்தேக நபரை தேடும் பணியில் பொலிஸார்
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்
தலவாக்கலை நகரில் உள்ள தங்க ஆபாரணங்கள் விற்பனை செய்யும் நிலையத்தில் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான தங்கமாலையினை கொள்ளையிட்டு சென்ற சந்தேக நபரை கைது செய்வதற்கு தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது,நேற்றைய தினம் (வியாழக்கிழமை) மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்தேக நபர் தங்க மாலையினை கொள்வனவு செய்வது போல் பரீசிலனை செய்து அதனை பூமியில் போட்டுவிட்டு, பிறகு அதனை அவர் அணிந்திருந்த காற்சட்டையின் பையினுல் மறைக்கும் காட்சி குறித்த நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதைத் தொடர்ந்து சி.சி.டிவி.கேமராவின் உதவியோடு குறித்த சந்தேக நபரை பொலிஸார் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த சந்தேக நபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள்
தலவாக்கலை பொலிஸ் நிலையத்திற்கு தகவலை வழங்குமாறு தலவாக்கலை பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தலவாக்கலை பொலிஸ் நிலையத்திற்கு தகவலை வழங்குமாறு தலவாக்கலை பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலவாக்கலை
பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments: