ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா


ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் உணவு தயாரிப்புப் பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் 8 பேருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் உணவு தயாரிப்புப் பிரிவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது.

கட்டுநாயக்க  பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய உணவு விநியோக பிரிவில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அங்குள்ள அனைத்து பணியாளர்களுக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
No comments: