மட்டுப்படுத்தப்படவுள்ள ரயில் சேவைகள்


நத்தார் பண்டிகையினை முன்னிட்டு ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று  முதல்  எதிர்வரும்  27 ஆம் திகதி வரை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ரயில்சேவைகள் முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரதான மார்க்கங்கள் கரையோர மார்கங்கள்  களனிவெலி   உட்பட புத்தளம் ரயில் மார்க்கம்  மற்றும் வடக்கு ரயில் மார்க்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

பண்டிகைக்காலங்களில் பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் வகையில்  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்   குறிப்பிட்டுள்ளது.

No comments: