தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் பொது போக்குவரத்து சேவைகளைக் கண்காணிக்க சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகள் நியமனம்
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் பொது போக்குவரத்து சேவைகளைக் கண்காணிக்க சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பொது போக்குவரத்து சேவைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் பொலிஸ் அதிகாரிகள் சிவில் உடையில் சுற்றிவளைப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவாமல் பாதுகாப்பாகச் செயற்படுமாறும் மற்றும் வாகன விபத்து ஏற்படாமல் வீதிகளில் பாதுகாப்பான முறையில் பயணிக்குமாறு பொது மக்களிடம் அஜித் ரோஹன கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது வீதிகளில் விபத்துக்கள் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனால் வீதியில் பயணிக்கும் போது எந்த நேரமும் பாதுகாப்பாகச் செல்லுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
மதுபோதையில் வாகனத்தை வேகமாகச் செலுத்த வேண்டாம் அத்தோடு பாதுகாப்பான முறையில் வாகனங்களைச் செலுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments: