நோர்வூட் பகுதியில் 170 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்


நோர்வூட் வெஞ்சர் அப்பலோரன்ஸ் தோட்டப்பகுதியில் 
சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள 170 பேருக்கு நேற்றைய தினம் (22.12.2020) இரவு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இந்த பி.சி.ஆர் பரிசோதனை பொகவந்தலாவ பொது சுகாதார அதிகாரிகளினால் மேற்கொள்ளபட்டு,அதன் மாதிரிகள் பெறப்பட்டு  நுவரெலியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர் .

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட  நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில்
பணிபுரிந்து வந்த ஆசிரியை ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை
தொடர்ந்து ஆசிரியையோடு தொடர்பினை பேணிவந்த குறித்த பாடசாலையில்  கல்வி பயின்று வந்த இரு மாணவர்களுக்கு  கடந்த 12.12.2020 தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதனடிப்படையில் குறித்த மாணவர்களோடு தொடர்பினை பேணிவந்த இந்த
170 பேருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: