வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு


வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், நுவரெலிய மாவட்டத்திலும்  தொடர்ந்தும் மழையுடனான வானிலை நிலவுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏனைய சில பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில், மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும் எனவும் எதிர்வுக் கூறப்பட்டுள்ளது. 

அத்துடன், சப்ரகமுவ மற்றும் தென்மாகாணங்களிலும், களுத்துறை மாவட்டத்தின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது.

இதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்களை மிகவும் பாதுகாப்பாக செயற்படுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

No comments: