மரண பரிசோதர்களுக்கான பற்றாக்குறை தொடர்பில் நீதி அமைச்சர் அதிகாரிகளுக்கு விடுத்துள்ள பணிப்புரை
நாடு முழுவதும் நிலவும் மரண பரிசோதர்களுக்கான பற்றாக்குறையை விரைவில் நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் 302 திடீர் மரண பரிசோதகர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக நீதி அமைச்சு அறிக்கையூடாக தெரிவித்துள்ளது.
காலதாமதமின்றி சேவைகளை வழங்குவதற்காக உடனடியாக வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதி அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதனடிப்படையில், வெற்றிடங்கள் தொடர்பில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு Online ஊடாக தகுதி வாய்ந்தோர் தெரிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: