பொது மக்களுக்கு இராணுவ தளபதி விடுக்கும் வேண்டுகோள்


வார இறுதியில் கிடைக்கின்ற தரவுகளை அடிப்படையாக வைத்தே பண்டிகை காலம் குறித்து தீர்மானிக்கப்படும் என இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

பண்டிகை காலத்தில் ஊரடங்கு உத்தரவினை விதிப்பது தொடர்பிலோ அல்லது தனிமைப்படுத்தல்களை முன்னெடுப்பது தொடர்பிலோ அதிகாரிகள் எந்த முடிவையும் எடுக்கவில்லை என இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையையைக் கருத்திலெடுத்த பின்னர் தேவைப்பட்டால் எந்த நிமிடத்திலும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என அவர் தெரிவித்துள்ளர்.

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளிற்கு ஆதரவு வழங்குமாறு மக்களை கேட்டுக்கொண்டுள்ள இராணுவதளபதி பண்டிகை காலத்தின் போது மேல்மாகாணத்திலிருந்து வெளியேறுவதை மக்கள் தவிர்த்துக்கொள்ளவேண்டும் எனவும வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments: