அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை


கொவிட் ஆபத்தில்லாத இடங்கள் என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் புதிய நோயாளர்கள் உருவாகும் சூழல் காணப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

இந்த நிலை குறித்து கவனம் செலுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் அவசியம் எனவும் தெரிவித்துள்ளது.

காலி, பொலனறுவை, கண்டி, இரத்தினபுரி போன்ற பகுதிகளில் புதிதாக நோயாளர்கள் கண்டுபிடிக்கப்ட்டுள்ளனர் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.இந்த பகுதிகளில் அதிகளவு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிய சிறிய கொத்தணிகள் உருவாகின்றன என குறிப்பிட்டுள்ள அவர் வெள்ளவத்தையில் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட 300 பி.சி.ஆர் சோதனைகளின் போது 12 நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments: