ரயில் பயணங்களை மட்டுப்படுத்த நடவடிக்கை - ரயில்வே திணைக்களம்


பண்டிகைக் காலத்தில் ரயில் பயணங்களை மட்டுப்படுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா  தொற்றுப் பரவல் ஏற்பட்டுள்ளதன் காரணமாக அத்தியவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அரசாங்கம் ஏற்கனவேயே வேண்டுகோள் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: