திறன் வகுப்பறைகளை கொண்ட பாடசாலைகளுக்கு மடிக்கணனி வழங்கி வைப்பு
திறன் வகுப்பறைத் தொகுதிக்கான (Smart Classrooms) மடிக்கணணிகளை யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன் இன்றைய தினம் (23) யாழ் மாவட்டசெயலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.
இந் நிகழ்வில் யாழ் அரச அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்கள், வலய கல்வி உதவி பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இவ் நிகழ்வில் உரையாற்றி அங்கஜன் இராமநாதன் கல்வியில் சிறந்து விளங்கிய பிரதேசம் இது தற்போது பல்வேறு பிரச்சனைகளால் கல்வியில் பின்தங்கியுள்ளோம். மறுபடியும் நமது பிரதேசத்துக்கான மீள்வு கல்வியிலேயே தங்கி உள்ளது. அந்த அடிப்படையில் இந்த திட்டம் சிறப்பான ஓர் திட்டமாகும்.
விளக்கு ஒளியில் கல்வி கற்ற சமூகமாக இருந்து இன்று smart board மூலம் கல்வி கற்கும் சூழல் உருவாகியுள்ளது. இதன் மூலம் இலகு வழியில் கல்வி கற்க கூடியதாக இருந்தது. smart board மூலம் கல்வி கற்பிக்கும் செயற்பாட்டிற்கு தொழில்நுட்ப அறிவினை தருவதற்கு நாம் தயாராக உள்ளோம்.
அடுத்த தலைமுறையின் கல்வி என்பது முக்கியமானதொன்றாகும் அந்த வகையில் நாம் ஒன்றாக இணைந்து அடுத்த தலைமுறையின் கல்விக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.
No comments: