கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்


நாட்டில்  592 கொரோனா தொற்றாளர்கள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நிலையில்,  அதில்  245  பேர் கொழும்பு மாவட்டத்திலே பதிவாகியுள்ளனர்.

இதனடிப்படையில், வெள்ளவத்தைப் பகுதியில் 48 பேருக்கு நேற்றையதினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக  கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி  தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்,  வெல்லம்பிட்டிய பகுதியில் 42 பேருக்கும், கொள்ளுபிட்டி பகுதியில் 17 பேருக்கும் கிராண்பாஸ் பகுதியில் 15 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு மாவாட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 16784 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: