முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்புக்கு எதிராக கல்முனையில் அமைதி ஆர்ப்பாட்டம்

எஸ்.அஷ்ரப்கான்


முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்புக்கு எதிராக அமைதி ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (25) கல்முனை மக்கள் வங்கிக்கு முன்பாக, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் கல்முனைத்தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.அப்துர் ரஸ்ஸாக் தலைமையில்
நடைபெற்றது.

இங்கு இடம்பெற்ற அமைதி  ஆர்ப்பாட்டத்தின் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.அப்துல் மனாப் மற்றும் பிரதேச வர்த்தகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு   கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.அப்துல் மனாப், 
கல்முனைத்தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.அப்துர் ரஸ்ஸாக் உள்ளிட்டோர் 
ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்தனர்.


No comments: