நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு


நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதன்படி, மின்னான, விலேகொட, யகுடாகொட, அஸ்ககுல வடக்கு, எஹெலியகொடை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட போபத்த, இறக்குவாணை நகரம், இறக்குவாணை வடக்கு மற்றும் தெற்கு, முசிம்புல, கொடகவெல பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கொட்டல ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி குறிப்பிட்டுள்ளது.

No comments: