மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறிய 8000 பேருக்கு ரெபிட் என்டிஜன்ட் பரிசோதனைகள் முன்னெடுப்பு
கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறிய 8000 பேருக்கு, இதுவரை ரெபிட் என்டிஜன்ட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, அவர்களில் 49 தொற்றாளர்கள் இதுவரை அடையாளங் காணப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் நபர்களுக்கான ரெபிட் என்டிஜன்ட் பரிசோதனை நடவடிக்கை, கடந்த 18ம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதோடு,மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறக் கூடிய 11 இடங்களில், இந்தப் பரிசோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.
No comments: