கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும் சில பிரதேசங்கள் அறிவிப்பு


கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை காலை 5 மணி முதல் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதன்படி, வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாலமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோகிலா வீதி ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.

No comments: