கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும் சில பகுதிகள் அறிவிப்பு


கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை காலை 5 மணி முதல் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதன்படி, வத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெரவலப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள நய்துவ பிரதேசம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளது.

அத்துடன், பேலியகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கஹபட கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் கிரிபத்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விலேகொட வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.

No comments: