மண்சரிவு அபாயம்; வலப்பனை - ஹங்குராங்கெத்த கண்டி வீதி மூடப்பட்டது
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்
மண்சரிவு அபாயம் காரணமாக வலப்பனை - ஹங்குராங்கெத்த கண்டி பிரதான வீதி இன்று
(20.12.2020) முதல் மீள் அறிவித்தல் வரை முழுமையாக மூடப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ரஞ்சில் அலாகோன் தெரிவித்துள்ளார்.
வலப்பனை - ஹங்குராங்கத்த கண்டி பிரதான வீதியில், கடந்த வருடம் டிசெம்பர்
மாதம் ஏற்பட்டிருந்த மண்சரிவால் 4 பேர் உயிரிழந்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் 40 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சிப் பதிவாகும் பட்சத்தில்
அந்த வீதி முழுமையாக மூடப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று (20.12.2020) பெய்த மழையால் 75 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சிப் பதிவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அங்கு மண்சரிவு ஏற்படும் அபாயம் காரணமாக , அந்த வீதி மீள்
அறிவித்தல் வரும் வரையில் முழுமையாக மூடுவதற்கான நடவடிக்கைகளை வலப்பனை
பொலிஸார், வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த வீதியைப் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தும் சாரதிகள், ஹங்குராங்கத்த கண்டி வீதியினூடாக, மாவபத்தாவ பிரதேசத்தூடாக பயணிக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

No comments: