பொது மக்கள் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுவதோடு பொறுப்புடனும் செயல்பட வேண்டும் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்


பண்டிகை காலங்களில் பொது மக்கள் சுகாதார வழிகாட்டிகளைப் பின்பற்றவேண்டும் மற்றும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 12 பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொழும்பு மத்திய பகுதி மற்றும் வட கொழும்பு 09 பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது, கொஸ்கமுவ , அவிசாவெல்ல, ருவான் வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகள், மேலும் பல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகள், கிராம சேவகர் பிரிவு, தொடர் மாடிகள், பல வீதிகள், தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என அஜித்ரோகண தெரிவித்துள்ளார்.

தற்போது நத்தார் பண்டிகை ஆரம்பித்துள்ளது இந்த தினத்தில் எங்களின் நத்தார் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த சந்தர்ப்பத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் பகுதிகளிலே தங்கியிருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதிகளிலிருந்து எக்காரணங்களுக்காகவோ வெளியே செல்லவேண்டாம் என அவர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: