ஹட்டன் டிக்கோயா நகரசபை உறுப்பினருக்கு கொரோனா

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹட்டன் டிக்கோயா நகரசபை உறுப்பினர்

சசி ரத்நாயக்கவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் டிக்கோயா பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று (24.12.2020) வெளியான பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் ஊடாக இவருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அக்கரபத்தனை பிரதேச சபையின் தலைவர் கதிர்செல்வனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து,கண்டி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவரோடு தொடர்பினை பேணிவந்தமை தொடர்பில் ஹட்டன் டிக்கோயா நகரசபை தலைவர் சடையன் பாலச்சந்திரன்,முன்னால் மத்திய மாகாண சபை உறுப்பினர் பிலிப், நகரசபை உறுப்பினர்
சசிரத்நாயக்க ஆகியோர் தனிமைபடுத்தப்பட்டிருந்தனர். 

இதனையடுத்து இவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொண்ட போதே குறித்த உறுப்பினருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றுக்குள்ளான உறுப்பினரை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையினை ஹட்டன் டிக்கோயா பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments: