பண்டிகை காலங்களில் மிக அவதானமாக இருக்குமாறு மக்களிடம் பொலிஸார் கோரிக்கை


எதிர்வரும் நாட்களில் பண்டிகைக்காலம் ஆரம்பமாகவுள்ளதால், குற்றவாளிகள் மற்றும் திருடர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை காணக்கூடியதாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இப்பண்டிகை காலங்களில் பயணங்களை மேற்கொள்ளும்போது குற்றவாளிகள் மற்றும் திருடர்களிடமிருந்து விழிப்பாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் பணம் மற்றும் நகைக்கொள்ளை போன்ற சில சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, பயணங்களில் ஈடுபடுகின்ற சந்தர்ப்பங்களில் தமது பணம் மற்றும் நகைகள் சம்பந்தமாக மிக அவதானமாக இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: