பண்டிகைக் காலங்களில் வாகனங்களை அவதானமாக செலுத்துமாறு கோரிக்கை


பண்டிகைக்காலம் என்பதால் அவதானம் இன்றி வாகனங்களைச் செலுத்தி விபத்துகள் ஏற்படும் சந்தர்ப்பம் அதிகரித்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் மாத்திரம் நாட்டின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற விபத்துகளில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வார இறுதி நாட்களில் வாகனங்களைச் செலுத்துகின்றவர்கள் மிகவும் அவதானமாகச் செலுத்துமாறு அஜித் ரோகண கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments: