இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை


இந்தியாவில் நேற்றைய தினம் 23 ஆயிரத்து 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி இந்தியாவில் தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 845 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் நேற்றைய தினம் கொரோனா தொற்றிலிருந்து 24,661 குணமடைந்துள்ளதுடன்,குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 97 இலட்சத்து 17 ஆயிரத்து  834 ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் 336 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன்,இந்தியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 47 ஆயிரத்து 92 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: