நாட்டில் நேற்றைய தினம் 6 கொரோனா மரணங்கள் பதிவு - முழு விபரம்


கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளமை நேற்று இரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 14 பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதான பெண் ஒருவர் இரத்தம் விஷமானமை மற்றும் கொரோனா நிமோனியா தாக்கம் ஆகியவற்றின் காரணமாக உயிரிழந்துள்ளார்.

வீரகுல பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதான ஆண் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட இருதய நோயினால் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 77 வயதான ஆண் ஒருவர், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் கொரோனா நிமோனியா தாக்கம் ஆகியவற்றின் காரணமாக உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 10 பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதான ஆண் ஒருவர், கொரோனா நிமோனியா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

கிரிவத்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 88 வயதான பெண் ஒருவர், உயர் இரத்த அழுத்தம் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பு மற்றும் கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட இருதய நோய் ஆகியவற்றின் காரணமாக உயிரிழந்துள்ளார்.

பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த 83 வயதான பெண் ஒருவர் உயர் இரத்த அழுத்தம் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பு மற்றும் கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட இருதய நோய் ஆகியவற்றின் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 171 ஆக உயர்வடைந்துள்ளது.

No comments: