கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நபர் ஒருவர் உயிரிழப்பு


கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நபர் ஒருவர், தனது வீட்டில் சுயதனிமையில் இருந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர், நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக, காலி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காலி – தெந்துகொட தலாபிட்டிய பகுதியைச் சேர்ந்த 76 வயதையுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபருக்கு, கடந்த ஆறாம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்ய்பட்டதையடுத்து, கரந்தெனிய கொரோனா சிகிச்சை நிவலையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்ததன் பின்னர், கடந்த 17 ஆம் திகதி முதல், அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்தப் பின்னணியிலேயே, அவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக, காலி தலைமையக பொலிஸ் நிலைய பரிசோதகர் கபில சேனாதிபதி டி சில்லா தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த நபரின் உடல் மீண்டும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: