அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 60 பேருக்கு கொரோனா தொற்று


அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை பிரிவில் உள்ள அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரையில் 60 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ் அகிலன் தெரிவித்தார்.  

மேலும் இன்றைய தினம் கிழக்கு மாகாணத்தில் நிகழ்ந்துள்ள இரண்டாவது கொவிட் 19 மரணமடைந்த நபர் அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள ஒலுவில் பிரதேசத்தை  சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டார்.  

மக்கள் கொவிட் 19 தொற்று தொடர்பில் மிக அவதானமாக செயற்படுமாறும் இன்று மரணமடைந்த நபரின்  குடும்பத்திற்கு தனது இரங்கலை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.  

No comments: