வட்டவளை மவுண்ட்ஜின் பகுதியில் இளைஞன் ஒருவருக்கு கொரோனா தொற்று - 118 பேர் சுயதனிமையில்
பொகவந்தலாவ நிருபர்.எஸ்.சதீஸ்
வட்டவளைப் பகுதியில் இளைஞன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து 118 பேர் சுயதனிமைப்டுத்தப்பட்டுள்ளதுடன் அட்டன் நகரிலுள்ள மூன்று கடைகள் மூடப்பட்டுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் மவுண்ட்ஜின் தோட்டத்தை சேர்ந்த 28 வயதுடைய இளைஞனுக்கே 18/12/2020 தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது
தொற்றாளர்களுடன் தொடர்பை பேணியவர்களுக்கு கடந்த 16 ஆம் திகதி மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையிலே குறித்த இளைஞனுக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

No comments: