பண்டிகை காலத்தில் மக்கள் தங்கள் நடமாட்டத்தினை குறைத்துக்கொள்ள வேண்டும் - சுகாதார அதிகாரி
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொறுத்தவரையில் அடுத்தவாரம் மிகவும் முக்கியமானது என தொற்று நோயியல் பிரிவின் தலைவர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
வைரஸ் தொடர்ந்தும் பரவிவருகின்ற நிலையில் அடுத்த வாரம் மிகவும் முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
பொருட்களை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் போன்றவற்றில் பெருமளவு மக்கள் ஈடுபடும்போது வைரஸ் பரவுவதற்கான ஆபத்து அதிகம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக பண்டிகை காலத்தில் மக்கள் தங்கள் நடமாட்டத்தினை குறைத்துக்கொள்ள வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வார இறுதியில் கொழும்பிலிருந்து வெளியேறுபவர்களை அன்டிஜென் சோதனைக்கு உட்படுத்துவதற்கான திட்டமுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments: