மேல் மாகாணத்தில் இருந்து வௌியேற முற்பட்ட 5 பேருக்கு கொரோனா - அன்டிஜென் சோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது


மேல்மாகாணத்திலிருந்து வெளியேற முயன்றவர்களை துரித அன்டிஜென் சோதனைக்கு உட்படுத்திய வேளை ஐந்து கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேல்மாகாணத்திலிருந்து வெளியேற முயன்ற 451 பேரை சோதனைக்கு உட்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேல்மாகாணத்திலிருந்து வெளியேறும் பயணிகளிற்கு இன்று காலை முதல் துரித அன்டிஜென் சோதனையை மேற்கொண்டுவருவதாக சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

கொரோனா ஆபத்தினை அடையாளம் காண்பதற்கான மாகாணத்தின் மூன்று பகுதிகளில் துரித சோதனையை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள சுகாதார அதிகாரிகள் வெளிமாவட்டங்களில் கொரோனா பரவுவதை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை என தெரிவித்துள்ளனர்.

கொழும்பு - கண்டி வீதியில் நிட்டம்புவவிலும்,அவிசாவல -  கொழும்பு வீதியில் கொஸ்கமவிலும் சிலாப வீதியிலும் துரித அன்டிஜென் சோதனைகளை முன்னெடுத்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

No comments: