அருங்காட்சியகங்கள் மீண்டும் திறக்கப்படும்


நாட்டில் உள்ள அனைத்து அருங்காட்சியகங்களும் எதிர்வரும் 20ம் திகதி முதல் திறக்கப்படவுள்ளதாக மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மத்திய கலாசார நிதியத்தின் கீழ் உள்ள அருங்காட்சியகங்கள் கடந்த சில நாட்களாக மூடப்பட்டிருந்தன.

இந்த நிலையில், சுகாதார வழிமுறைக்கு அமைவாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக அருங்காட்சியகங்களை திறக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் விமான நிலையம் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட உள்ள நிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, பொலனறுவை, சீகிரியா, கதிர்காமம், காலி, கண்டி மற்றும் அனுராதபுரம் ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள அனைத்து அருங்காட்சியகங்களும் நாளை மறு தினம் முதல் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: