தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய மேலும் 20 பேர் கைது


இன்று காலை  5 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை  மீறி  செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி,  தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த ஒக்டோபர் மாதம் 30ம் திகதி முதல்  இதுவரையான காலப்பகுதியில் 1611 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்  பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

No comments: