கெப் ரக வாகனமொன்று குளத்தில் வீழ்ந்து விபத்து - மூன்று பேர் சடலமாக மீட்பு


நேற்று மாலை முல்லைத்தீவு வவுனிக்குளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான கெப் ரக வாகனத்தில் பயணித்த நிலையில் காணாமல் போயிருந்த 3 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக மல்லாவி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தை தொடர்ந்து காணாமல் போயிருந்த 12 வயது சிறுமியின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதோடு,பின்னர் மேற்கொண்ட தேடுதலில் 2 வயதான சிறுமியின் சடலமும்,குறித்த வாகன சாரதியின் சடலமும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு வவினிக்குளத்தின் நீர் மட்டம் அதிகரித்து வான் பாயும் நிலையில் அணைக்கட்டு வழியாக கெப் ரக வாகனம் பயணித்த வேளையில் அது விபத்துக்குள்ளானது.

சம்பவமம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மல்லாவி காவற்துறையினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: